சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர் திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை செய்து விட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். கார் சமயபுரம் தாண்டி சென்று கொண்டிருந்தபோது, காரை வழிமறித்த மர்ம நபர்கள்,காரில் இருந்தவர்கள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த 10 கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 12கோடி எனக்கு கூறப்படுகிறது. இந்த நிலையில் தனிப்படையினர் நடத்தி வரும் நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்த3 நபர்களிடம் விசாரணையை தீவிர படுத்தியதில்
கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கைமாறி கை மாறி சென்றுள்ளதாகவும் இது சங்கிலித் தொடர் போல கொள்ளை கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் பவாரியா கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
