ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் முல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 63 )
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் இவர் கடந்த 11ஆம் தேதி வீட்டின் கதவு மற்றும் பீரோவை பூட்டாமல் முன்பக்க கேத்தை மட்டும் கூட்டிக்கொண்டு உறவினர்களுடன் காரில் வெளியூர் புறப்பட்ட சென்றார் பின்னர் மூன்று தினங்கள் கழித்து வீடு திரும்பினார்.
பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14 கிராம் தங்க நகைகள் 25 கிராம் வெள்ளி நகை செல்போன் லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் இது பற்றி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி காந்தி மார்க்கெட் எடத்தெரு ரோடு பிள்ளைமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53) இவரது மகன் ரோகன் ரெமி ஜென்ஸ் (வயது 24) இவர் காந்தி மார்க்கெட் பாய் கடை சந்து பகுதியிலுள்ள பொது கழிப்பிட பகுதியில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் ரோகன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட்டில் ..சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி கைது
சார்ஜாவிலிருந்து ஒரு விமானம் நேற்று இரவு திருச்சி வந்தடைந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 54) எந்த இடத்தில் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த போது அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது, இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.