தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது..
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ள போதிலும் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.167-க்கு விற்பனையானது மக்கள் மனதில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
08.10.2025 ஒரு சவரன் ரூ.90,400 (இன்று)
07.10.2025 ஒரு சவரன் ரூ.89,600 (நேற்று)
06.10.2025 ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 ஒரு சவரன் ரூ.87,600