தங்கம் விலை இன்று (30-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 9 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹4,560 அதிகரித்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.161-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது