ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலையை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று (07-10-2025) மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 600-க்கும் தங்கம் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.167-க்கும், ரூ.2,000 அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலே, அதாவது கிராம் ரூ.167-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.