Skip to content

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை பொறுத்தவரையில் குறையும் போது சொற்ப அளவிலும், அதிகரிக்கும் போது மட்டும் ஜெட் வேகத்தில் உயருகிறது. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் தங்கம் விலை அதிகரித்த நிலையில், இந்த ஆண்டும் விலையேற்றம் தொடரும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். அதே போன்று 2026-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வந்தது.

இதனிடையே, மத்திய பட்ஜெட் அறிவிப்பு, டாலர் மதிப்பு மாற்றம் போன்ற காரணங்களால் ஜனவரி இறுதியிலிருந்து தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இருப்பினும், இந்த விலை உயர்வானது நிரந்தரமல்ல, விலை ஏற்றம் நிச்சயம் தொடர்ந்து இருக்கும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(பிப்.23) கடும் உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹180 உயர்ந்து ரூ.14,860-க்கும், சவரனுக்கு ₹1,440 உயர்ந்து ₹118,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் நாளுக்கு நாள் புதிய உச்சம் கண்டு வந்த நிலையில், இன்று ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 10,000 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!