மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்து மத்திய பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது….. கோல்ட்ரிப் மருந்த சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பின் க்ஷகோல்ட் ஆலை நிரந்தரமாக மூடப்படும். ம.பியில் இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்படுகிறது என இவ்வாறு தெரிவித்தார்.