நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள தைத்திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் உழவர் சந்தையில் பூ,வாழை இலை, வாழை பழம்,மஞ்சள் கொத்துகள், கரும்பு,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் பொதுமக்கள்

மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பரபரப்பான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் தினமான நாளையும்

(15.01.2026) விடுமுறையின்றி உழவர் சந்தை செயல்படும் என்று உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் தெரிவித்துள்ளார்.

