Skip to content

கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூரில் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்தை பயணிகள் தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தும் வீடியோ வைரல் – பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்துக்கு சொந்தமான திருச்சியில் இருந்து திருப்பூர் வரை செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

அந்த ஏசி பேருந்து கரூர் திருக்காம்புலியூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ரவுண்டானா அருகில், திடீரென பழுதாகி நின்றுள்ளது.

பேருந்து பழுதானதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அந்த பேருந்தை கை

தாங்கலாக தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

பேருந்து பழுது காரணமாக திருச்சியில் இருந்து கரூர் வழியாக திருப்பூர் வரை செல்லக்கூடிய 20க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பேருந்து பழுது குறித்து அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து பாதி வழியில் பழுதாகி நின்றதும், பயணிகள் பாதிக்கப்பட்டதும் பிரச்சனையாகியுள்ள நிலையில், இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக பழுதடைந்த அரசு பேருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பழுதுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் பேருந்தை இயக்கி சென்ற பொழுது பேருந்து பாதி வழியிலேயே நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!