திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
