உதகை அரசு மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கும் வட மாநில மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மருத்துவ மாணவி தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி அந்த அரசு மருத்துவ கல்லூரியில் அவசர பிரிவில் பணியாற்றும் ஓம் பிரகாஷ் (44) என்ற மருத்துவர் தனியாக அழைத்து சென்றுள்ளார். அவரை உதகையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்து சென்ற அவர் மதுபோதையில் யூனிவர்சிட்டியில் பேசி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மருத்துவரிடம் சண்டையிட்டதாக கூறபடுகிறது. சத்தம் கேட்டு அங்கு சென்ற ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளர்.
அங்கு சென்ற போலிசார் விசாரணை செய்த போது போதையில் மருத்துவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பாதிக்கபட்ட மாணவி உதகையில் உள்ள அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அரசு மருத்துவர் ஓம் பிரகாஷை கைது செய்தனர். கைது செய்யபட்ட அரசு மருத்துவர் ஓம் பிரகாஷ் சென்னையை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே 2 திருமணங்கள் ஆன நிலையில் 2 மனைவிகளும் உடன் இன்றி தனிமையாக உதகையில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே கைது செய்யபட்ட அரசு மருத்துவர் ஓம் பிரகாஷ் ஏற்கனவே வேறு மாணவிகளையும் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

