ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யும் நடைமுறையைத் தவிர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 07.09.2021 அன்று சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை விரைவாக முடிவு செய்ய தேவையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அரசாணையால், ஓய்வு நாளில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதால் ஏற்படும் சலுகைகள் இழப்பு தவிர்க்கப்படுகிறது. ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது. ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்னரே நடவடிக்கையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.