Skip to content

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிபணி யாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ம.செல்வகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்தநல்லூர் வட்டார செயலாளர் ஔவைமணிமொழியாள் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் 5 சதவீதம் என்ற உச்சவரம்பினை நீக்க வேண்டும், 7-வது ஊதிய குழு 21 மாத ஊதிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலி யர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் தினக்கூலி பெறும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி விளக்க உரையினை ஜி .எஸ் இன்பராஜ்,ரே.டோ. ரெப்யூ ஜ்ராய், சி. ரவிச்சந்திரன் சம்பத்குமார் , மா .தாமோதரன், மாரியப்பன் பி.உஷா,ப. ஆறுமுகம், ஆர்.அமிர்தம்மாள், சோமசுந்தரம், எல். காயத்ரிதேவி உரையாற்றினர்கள். மேலும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையினை மாநில தலைவர் அருள் சோழன் பேசினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கு.செல்வகுமார், ஜீ.முரளி, பெ.விவேகானந்த் உள்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!