தமிழக கவர்னர் ரவி மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில்போடுவதாகவும், அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், கவர்னருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது. கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ரவிக்கு பிரதமர் அலுவலகம் அவசர அழைப்பு விடுத்தது. அதை ஏற்று கவர்னர் இன்று காலை 6.50 மணி விமானத்தில் டெல்லி சென்றார். அவருடன் கவர்னரின் செயலாளர், உதவியாளர்கள், சென்று உள்ளனர்.