Skip to content

கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை ( 29 – ந் தேதி) திருச்சி வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை திருச்சி வரும் கவா்னர், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்கிறார். இரவில் திருச்சியில்  தங்கி ஓய்வெடுக்கும் அவர், மறுநாள் வெள்ளிக்கிழமை (30 ஆம் தேதி) காலை, திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார்
error: Content is protected !!