Skip to content

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர்.

கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல், அவருக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சட்டசபையில் உரையாற்றாமல், கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார். எனவே, கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக, தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், வி.சி.,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!