Skip to content

அரசு (ஆதிந) நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பயிலும் அவலம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மேல வழுத்தூரில், மேல வழுத்தூர்- வடக்கு மாங்குடி சாலையில் ரயில்வே கேட் அருகே அரசு ஆதி திராவிட நலம் நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் மொத்த பரப்பு 15,000 சதுர அடியாகும். தொடக்கப் பள்ளி தொடங்கிய நாள் 1950. 82 ல் நடுநிலைப் பள்ளியாகியுள்ளது. 98 ல் 800 மாணவர்கள் படித்தப் பள்ளியில் தற்போது 37 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். 4 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 21- 22 ல் 79 மாணவர்கள் இருந்த நிலையில் தற்போது 37 ஆக குறைந்து விட்டது. எம்மிஸ் நம்பரை வைத்து பல மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டனர். இதற்கு காரணம் ஒரு கட்டடத்தில் எட்டு வகுப்புகள் செயல் படுகின்றன. பள்ளி கட்டடத்தின் மேற்கூரை சிமெண்ட் ஷீட் என்பதால் மாணவர்கள் தலை வலி உள்ளிட்ட உடல் நலக் குறைவால் அவதிப் படுகின்றனர். மரத்தடியிலும் வகுப்பு நடைப் பெறுகின்றன. பள்ளியின் சமையற் கூடமும் பழுதடைந்த நிலையில் உள்ளது. பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தற்போது படிக்கும் மாணவர்களும் அடுத்த வருடம் படிப்பார்களா என்ற கேள்விக் குறியுடன் ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி பழமையான இந்த பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, தரமான முறையில் போதுமான கட்டமைப்புடன் புதிதாக பள்ளிக்கு கட்டடம் கட்டிக் கொடுக்க மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பட விளக்கம்: மேல வழுத்தூர் அரசு ஆதி திராவிட நலம் நடுநிலைப் பள்ளி யில் கட்டட வசதியில்லாததால் வகுப்பு மரத்தடியில் நடைப் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!