Skip to content

கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் இன்று நடக்கிறது. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வு எழுத மாநிலம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 50,144 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக 100 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்க 175 தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தவிர அரை கண்காணிப்பாளர் உள்பட 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது…

கோவை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுத 50.144 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னதாக வந்து விட வேண்டும், தேர்வர்கள் காலை 8:30 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:30 மணி வரை நடக்கும், தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஒவ்வொரு மையத்திலும் முதன்மை கண்காணிப்பாளர் அறை, கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வர்கள் அனைத்தையும் வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தூய மைக்கல் மேல்நிலை பள்ளியில் 300 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 7 மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்த லீஜா குழந்தையை அவரது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார். தற்பொழுது தேர்வு எழுத தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சோதனைக்கு பின்னர் அனுமதித்து வருகின்றனர்.

error: Content is protected !!