பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு (GST 2.0) மூலம் பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றைய தினம் முடிந்தது, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த புதிய வரிவிதிப்பிற்கு, நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றங்கள் வரும் 22-ம் தேதி அமலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி அமைப்பு (5%, 12%, 18%, 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) எளிமைப்படுத்தப்பட உள்ளது. இதனால் பல பொருட்களின் வரி விகிதங்கள் குறைவதால், அவற்றின் விலைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
33 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், அரிய நோய்களுக்கான மருந்துகள்.தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடுகள்.நோட்புக்ஸ், பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்கள். UHT பால், பனீர், பீட்சா பிரட், சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி உள்ளிட்டபொருள்களுக்கெல்லாம் இனி ஜிஎஸ்டி கிடையாது.
GST சீர்திருத்தங்களின் அடிப்படையில் மோட்டார் வாகனங்களுக்கான வரி வரம்பு 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1,500 cc-க்கு மிகாத டீசல் கார்கள், ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்பட 3 சக்கர வாகனங்கள், 1.200 cc-க்கு குறையாத Hybrids, மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள், வாகனங்களின் பாகங்கள், 350 cc-க்கு குறைவான பைக்குகள் ஆகியவை அடங்கும்.
மேலே குறிப்பிட்டபடி, காக்ரா (Khakra), சப்பாத்தி, பரோட்டா ஆகிய உணவுப் பொருள்களுக்கு GST-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட Dry Fruits மற்றும் Nuts வகைகளுக்கு 18%-லிருந்து 5% ஆக GST குறைக்கப்பட்டுள்ளது. GST கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய FM நிர்மலா சீதாராமன், பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் மீதான GST வரி குறைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்
பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி கிடையாது. இதுவரை மேப், சார்ட், பென்சில், கிரேயான்ஸ், ஷார்ப்னர், நோட் புக்ஸ் ஆகியவை 12% ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்தன. இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு இவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டுள்ளது. அதே போல 5% வரி வரம்பில் இருந்த ரப்பருக்கும் இனி வரி கிடையாது.
புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உடல்நலம், மருத்துவம் சார்ந்த துறைக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹெல்த் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ்-க்கு 18% ஆக இருந்த வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. தெர்மோமீட்டர், மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன், அனைத்து நோயறியும் கருவிகள் மற்றும் ரீ-ஏஜண்ட்கள், குளூக்கோமீட்டர் மற்றும் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ், பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண்ணாடி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப், ஷேவிங் கிரீம் விலை குறையும். சமையல் பாத்திரங்கள் மற்றும் பிறந்த குழந்தைக்கு பயன்படும் பொருள்களின் மீதான வரியும் 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் மீதான வரியும் 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிராக்டர் டயர்கள் & பாகங்கள், டிராக்டர்கள், குறிப்பான உயிர் உரங்கள், நுண்சத்துகள், சொட்டுநீர் அமைப்பு & தெளிப்பான்கள், மண்ணை பதப்படுத்தும் வேளாண் & தோட்ட உபகரணங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் டிவி, பைக், ஏசி விலை குறைகிறது 28% ஜிஎஸ்டி வரம்பு நீக்கப்பட்டதால், அந்த பட்டியலில் இருந்த பெரும்பாலான பொருள்கள் 18% வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, ஏசி, டிவி (32 inch மேல்), கம்யூட்டர் மானிட்டர், புரொஜெக்டர், டிஷ் வாஷிங் மெஷின் உள்ளிட்டவை 18% வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பைக்குகள்(350cc-க்கு கீழ்) உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சொகுசு கார்கள், கூல்டிரிங்ஸ், பான்மசாலா, புகையிலை பொருள்களுக்கு 40% வரிவிதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பீட்சா பிரட், பனீர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உயிர்காக்கும் மருந்து பொருள்களுக்கான வரி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதாகவும், அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கும் 18% வரிவிதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிராக்டர், வேளாண் பொருள்களுக்கு 5% வரிவிதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.