குஜராத் மாநிலத்தில் மாஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள கம்பீரா என்ற பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த பாலம் போக்குவரத்து நிறைந்த பாலம் இடிந்த விழுந்தபோது அதில் ஏராளமானோர் சென்று வந்தனர். வதோதரா மற்றும் ஆனந்த்ஆகிய முக்கியமான இரு மாவட்டங்களை இந்த பாலம் இணைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., கவுரவ் ஜசானி கூறியதாவது; ஆனந்த், வதோதராவை இணைக்கும் இந்த பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. ஆற்றில் பல வாகனங்கள் விழுந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
43 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், கடந்தாண்டு தான் பழுது பார்க்கப்பட்டது. கண்டெய்னர் லாரி, வேன் என மொத்தம் 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.