Skip to content

குருபூஜை விழா……..தேவர்சிலைக்கு….. முதல்வர் மரியாதை

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  மதுரை புறப்பட்டு சென்றார். இன்று காலை  கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர்  ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு  பசும்பொன் புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சா்கள்   பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி,  தங்கம் தென்னரசு,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  டிஆர்பி ராஜா, எம்.எல்.ஏ. தளபதி  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!