பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. எம்.பி. , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் இந்த வழக்குகளை விசாரித்து இரண்டு வழக்குகளிலும் ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து ராஜா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்து ஐகோர்ட் நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு
- by Authour
