புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த
சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் என்ற சுரேஷ் (32),இவரது சொந்த சித்தி சிவகாமி, இவர் புதுக்கோட்டை கணேஷ்நகர் பொன்நகரில் வசித்து வந்தார். இவரது மகள் லோகப்பிரியா(21),
கடந்த 2021ல் சுரேஷ், தனது சித்தி வீட்டுக்கு வந்தார். அப்போது தனிமையில் இருந்த லோகப்பிரியா அணிந்திருந்த தங்க நகைக்கு ஆசைப்பட்ட சுரேஷ், தங்கை லோகப்பிரியாவை தாக்கி கொலை செய்து விட்டு நகைகளை திருடிச்சென்றார்.
இது தொடர்பாக கணேஷ் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லெட்சுமணன் என்ற சுரேசை கைதுசெய்து புதுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் நீதிபதி சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். 302க்கு தூக்குதண்டனைஇறக்கும்வரை,
392-க்கு10வருடம்சிறை , மற்றும் ரூ. 500அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டவில்லை என்றால் மேலும் ஒருமாதம் சாதாரண சிறை தண்டனையும் விதித்தார்.
தீர்ப்பை கேட்டதும் தூக்கு தண்டனை பெற்ற சுரேசின் தாயார் கதறி அழுதார். என் மகன் இந்த கொலையை செய்யவில்லை என்றார். அதே நேரம் கொலை செய்யப்பட்ட லோகப்பிரியாவின் தாயார் சிவகாமி, என் மகள் கொலைக்கு நீதி கிடைத்துள்ளது என்று கும்பிட்டபடியே சென்றார்.