திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு “பள்ளிக் கல்வியின் பாதுகாவ

லர்” விருதை கல்லூரியின் தலைவர் வழங்கி கௌரவித்தார்கள்.
கல்வி பணியை திறம்பட செய்யும் ஆளுமைகளுக்கு “கல்விப் பணியின் காவலர்” விருதை

அமைச்சர் வழங்கி கௌரவித்தார்கள்
இந்நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராஜியா கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் சிறப்பான எழுச்சி உரையை வழங்கினார்கள்.இதில் ராஜியா மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட நாட்டுப்பற்று பாடல் இந்தியாவின் சமய ஒற்றுமைக்கு மிகப்பெரும் சிகிச்சையாக அமைந்தது என்று அமைச்சர் சிலாகித்தார்.
நானும் ஒரு 10% இஸ்லாமியன் தான். மூன்று நாட்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பேன். பல

நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டாலும் ராஜியா கல்லூரி நடத்திய நிகழ்வு என் மனதில் ஆழமான இடம் பிடித்தது என்று நெகிழ்ந்து போனார்.
குறிப்பாக இந்த நிகழ்வில் கல்விப் பணியை சிரம் மேல் ஏற்று செய்யும் ஆளுமைகளை கௌரவித்தது முற்றிலும் புதிய கண்ணோட்டம். ராஜியா கல்லூரி நிறுவனர் உஸ்தாத் ஃபைஜுல் பாரி ஆலிம் பிலாலி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். நான்கு புறமும் நெருக்கடிகள் சூழ்ந்தாலும் திராவிட மாடல் அரசு சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக திகழும் என்பதை மனமார உறுதிமொழிகிறோம். என்று அமைச்சர் உரையாற்று முடித்தார்.

