திருச்சி பாரதியார் சாலையில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.இந்த பகுதியில் 4 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன . இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பல மாணவர்கள் இந்த முனீஸ்வரன் கோவில் பஸ் நிறுத்த பகுதியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக கழிவுநீர் செல்வது தடைபட்டு நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மாநகராட்சியும் அதில் கவனம் செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி பாரதியார் சாலையில் சுகாதார சீர்கேடு.. பள்ளி மாணவர்கள் பாதிப்பு
- by Authour
