இந்தியாவில் இதய நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கான மருந்துகள் விற்பனை 5 ஆண்டுகளில் 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் இளம் வயதில் இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை உறுதி செய்வது போல் கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொழுப்பு செரிமான குழாயில் சிக்கல், தொற்று அல்லது சர்க்கரை நோய்களுக்கான மருந்துகள் விற்பனையை விட, கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருந்துகளை ரூ.1,761 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 2025-ம் ஆண்டில் ரூ.2,645 கோடிக்கு மருந்துகள் விற்பனையாகி உள்ளன.
இந்த புள்ளி விவரத்தின்படி இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை ஆண்டுதோறும் சராசரியாக 10.7 சதவீதம் அதிகரித்து வந்துள்ளன.நாட்டில் ஏற்படும் 63 சதவீத உயிரிழப்புகள் எளிதில் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. அதில் 27 சதவீதம் பேர் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்கின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.