Skip to content

“என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”…. நடிகர் ரஜினிகாந்த்

  • by Authour

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும்  நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

கே.பாலச்சந்தர்  இயக்கத்தில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி  வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்கள்,  வித்தியாசமான கதாப்பாத்திரங்கள்  என தொடர்ந்து 50 ஆண்டுகளாக  சினிமாவில் உச்சநட்சத்திரமாக கோலோச்சி வருகிறார். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி, தனது 171வது படமான ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம்  நேற்று  உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது.  திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சுதந்திர திவ வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

error: Content is protected !!