சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் த தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்தது. கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* பாரிஸ்- 168.9
* மடிப்பாக்கம்- 148.2
* கொரட்டூர்-142.8
* நெற்குன்றம்- 138.6
* நாராயணபுரம் ஏரி- 124.8
* அம்பத்தூர்- 112.5
* வளசரவாக்கம்- 111.6
* ஒக்கியம் துரைப்பாக்கம் – 108.3
* மேடவாக்கம்- 105.3
* பள்ளிக்கரணை- 104.1
* அய்யம்பாக்கம்-96.9