தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னல் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெப்பம் நிலவி வந்த நிலையில், மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பொழிய தொடங்கியது. தஞ்சை, கண்டியூர் மேல திருப்பந்துருத்தி, திருவையாறு, விளார், நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள் . அதே நேரத்தில் காலை முதல் வெயிலால் அவதிப்பட்ட வந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழை சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி ஆறுதலை தந்தது.
தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை
- by Authour
