கோவை, மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவை குற்றாலத்தில் நேற்று மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு முழுவதும் பரவலாக மழை பொய்ததின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கோவையின் மிக முக்கிய நீதியாகவும் விவசாயிகள் வாழ்வாதாரமாக இருக்கும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வருவது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளநீர் கரை புரண்டு ஒடுகிறது. மிக நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வரண்டு காணப்பட்ட சித்திரை சாவடி தடுப்பணையில் தண்ணீர் பெருக்கு எடுத்து ஒடும் அழகை காண சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். நீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அதனால் பாதுகாப்பு கருதி தொண்டாமுத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.