கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த கோபால் என்ற விவசாயி ஒரு ஏக்கரில் வாழை மரங்கள் நட்டிருந்ததில் சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து அடியோடு சாய்ந்தது.
அதேபோல் மகிளிப்பட்டி உடையாந்தோட்டத்தை சேர்ந்த செந்தில் என்ற விவசாயி 2 ஏக்கர் வாழை பயிரிட்டு அறுவடைக்கு 10 நாட்களில் இருக்கும்
நிலையில் சுமார் 350 க்கு மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் அவருக்கு ரூ.1.25 லட்சம் நஷ்டமானது. இருவருக்கும் தலா ரூபாய் 1.25 லட்சம் ரூபாய் வரை நஷ்டமானதால் விவசாயிகள் இருவரும் கவலை அடைந்தனர். மேலும் பல்வேறு விவசாயிகள் வாழை மரங்கள் 50, 100 என காற்றால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.க்கும் மேற
