Skip to content

திருச்சி ஏர்போட்டில்…ரூ. 12கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி, ஏர்போட்டிலிருந்து தினசரி உள்நாடு, வெளிநாடுகளுக்கு என 100 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வருவோர் சிலர் போதைபொருட்கள், அந்நாட்டு வன சூழலில் வாழக்கூடிய பிராணிகள், சிகரெட்டுகள், தங்கம், மின சாதன சுருவிகள் போன்றவற்றை வரி செலுத்துவதை தவிர்த்து கடத்தி வருகின்றனர். அவ்வாறு கடத்தி வரப்படும்போது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்  கடத்தி வந்தவர்கள் இதுபோன்று வேறு ஏதும் கடத்திலில் ஈடுபட்டுள்ளனரா? என விசாரணை செய்து வருகின்றனர். இனைத்தொடர்ந்து சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தாய்லாந்து தலைநகர் பேங்காங்கிலிருந்து. கோலாலம்பூர் வழியாக வந்த ஒரு பயணியின் உடமைகளை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். இதில் அவர் 11.8 கிலோ மதிப்புள்ள உயர்ரக ஹைடோபோனிக் ரக கஞ்சாவை 28 பொட்டங்களில் அடைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை போதைபொருள் மற்றும் மனநல சார்ந்த பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்த கடத்தல் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போன்ற கடத்தல் சம்பவங்கள் திருச்சி விமான நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!