திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து கடவுளின் உருவப்படத்தை எரித்து அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய நபர்களில் ஒருவரான அடைக்கலராஜ் என்பவர் நேற்று (02.10.2025) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும்,இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை இன்று (03.10.2025) சைபர்கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். மேற்படி வழக்கில் தொடர்புடைய நபர்களில் இதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .செ.செல்வநாகரத்தினம்,. அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.