ஆந்திராவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட துணை வட்டாட்சியரின் கணவர் சூரிய பிரகாஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டாக காதலித்து வந்த துணை வட்டாட்சியர் சந்தியாவும் சூர்ய பிரகாஷ் என்பவரும் நேற்று திருமணம் செய்துள்ளனர். ஜாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்த சந்தியாவின் சகோதரர்கள், சூர்ய பிரகாஷை கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சூர்ய பிரகாஷின் ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

