ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தார். 150 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சுவர் இடிந்து விழுந்த தருணத்தில், சுமார் 12 முதல் 15 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன், உள்ளூர் போலீஸாரும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
“இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களில் 7 பேர் உயிரிழந்துவிட்டனர். 4 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

