Skip to content

ஓசூர் தேர்த்திருவிழா கொண்டாட்டம்: மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

சந்திரசூடேஸ்வரர் கோவில் ஓசூர் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள திருத்தலமாகும். இந்த கோவில் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இத்திருவிழா மார்ச்-3-ந் தேதி நடைபெற உள்ளது இவ்விழாவினை காண அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதன்படி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என தெரிவித்துள்ளார். மேலும், இதை ஈடுகட்டும் வகையில் வருகிற 14-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!