சுகாதாரத்துறை அதிகாரி வீடு புகுந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் . இவரது மனைவி கற்பகம் (வயது 52 .இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். வேலைக்கு செல்லும்போது வீட்டை,பூட்டிவிட்டு சாவியை மின் சாதன பெட்டிக்குள் வைத்துவிட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல் அதில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீடு புகுந்து அந்த சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்று 71/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கற்பகம் உறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று, தீவிரமாக கண்காணித்தனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 52). என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன் திருடர்கள் 3 பேர் கைது.. 3 பேர் எஸ்கேப்
திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோரையாறு பாலம் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் இவரிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் பிராட்யூர் பகுதியில் சரவணன் என்பவர் செல்போனையும் இரண்டு பேர் பறித்துச் சென்று தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து எடை மலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த தவசி என்கிற தவசு (வயது 23), கருமண்டபத்தைச் சேர்ந்த அர்ஜுனன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருவரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியில் செல்லத்துரை என்பவரின் செல்போனை பேசுவது போல் கேட்டு வாங்கி, திருடிவிட்டு தப்பி ஓடிய சிவகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் திருவரங்கம் பகுதி திருவானைக்காவல் இரணியம்மன் கோவில் அருகே லோகநாதன் என்கிற முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய மூன்று வாலிபர்களையும் திருவரங்கம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

