Skip to content

”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

  • by Authour

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பிரியா ராஜன், ஏற்பாட்டில், 27-11-2025 அன்று ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன், கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகால நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில், 27-11-2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கான அழைப்பிதழை  மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனிடம் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார்.

error: Content is protected !!