திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆயத்தப்படுத்தும் விதத்தில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு அமைப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கோரிக்கையை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டம் தூங்குவதற்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஒரே பணி ஒரே கல்வித் தகுதி ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த பொழுதும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை புறந்தள்ளி இரண்டு விதமான ஊதியங்களை அரசு முன் வைத்தது. இதனை கலைய கோரி கடந்த 15 ஆண்டுகளாக இயக்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022 டிசம்பர் மாதம் 6 நாட்கள் காலவரையற்ற உண்ணாத போராட்டம் நடைபெற்ற போது தமிழக முதல்வர் புத்தாண்டின் முதல் அறிவிப்பாக போராடும் 20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர்கள் குழு ஒன்றை அமைத்து ஊதியம் முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்பு ஆணையிட்டார் குழு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இதுவரை எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை
16 ஆண்டுகளாக பல்வேறு பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம் இனியும் கால தாமதப்படுத்தாது மூன்று நபர்கள் குழுவின் அறிக்கையை பெற்று விரைவில் தேர்தல் அறிக்கை எண் 311 இல் கூறியபடி சம வேலைக்கு சம ஊதியம் பலன் கிடைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் நாகராஜ் போராட்டம் குறித்து பேசினார்.