முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று உரிமை மீப்பு உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரை அடுத்த தாந்தோன்றிமலை வட்டார

போக்குவரத்து அலுவலகம் முன்புறம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் கூட்டு தலைமையில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

