Skip to content

குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. நேற்று முன்தினம் இவர்களுக்குள் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நேற்று அதிகாலை விஷ்ரூத் தவறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

சென்னையில் உள்ள வழக்கறிஞரான தனது அண்ணனை நேரில் சந்தித்து கூறியுள்ளார். விஷ்ரூத்தை அவரது அண்ணன் குளித்தலை காவல் நிலையத்தில் சரணடைய வைத்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஸ்ருதி வேறொரு ஆண் நபரிடம் செல்போனில் பேசியதாகவும் இதனால் அவரை கண்டித்திருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகில் உள்ள உறவினரிடம் சிரித்து பேசியதை கண்டு இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஸ்ருதியை தாக்கியதாகவும், இதன் காரணமாகவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!