தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9) மற்றும் மனைவி மஞ்சு ஆகியோருடன் மல்காபூர் புறநகரில் உள்ள ஆதர்ஷ்நகர் காலனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் சதாசிவபேட்டை மண்டலத்தில் உள்ள ஆத்மகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டையிட்டதால் தம்பதியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், மனைவி 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த சுபாஷ், முதலில் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திங்கட்கிழமை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகளின் தரையில் இறந்து கிடந்த நிலையில் சுபாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். தடவியியல் குழு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தது. சுபாஷ் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது இதில் அவரது மனைவி மஞ்சுளா மீது சந்தேகம் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். மனைவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார். சம்பவ இடத்தை எஸ்.பி. பரிதோஷ் பங்கஜ் ஆய்வு செய்து விவரங்களை விசாரித்தார்.