Skip to content

மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க கதறினார். வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டு கெஞ்சியபோதும், பல வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனால் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனதால் வெங்கட்ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் நடந்தது பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பிஸ்யான சாலையில். வெங்கட்ரமணா (வயது 48) மற்றும் ரூபா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வாகனத்தை நிறுத்திய ரூபா, கணவரை சாலையோரம் படுக்க வைத்து, கடந்து சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கோரினார். கண்ணீரும் கதறலுமாக “எனக்கணவருக்கு உதவுங்கள், ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக உதவுங்கள்” என்று கெஞ்சினார்.

ஆனால் பலர் வாகனத்தை மட்டும் மெதுவாக ஓட்டி சென்றுவிட்டனர். சிலர் நிறுத்தினாலும் உதவி செய்ய தயங்கினர்.சுமார் 20-30 நிமிடங்கள் கழித்து வந்த ஆம்புலன்ஸில் வெங்கட்ரமணாவை அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவியதும், பொதுமக்களிடையே கடும் கோபமும் வேதனையும் ஏற்பட்டது. “மனிதாபிமானம் இல்லையா?” என்று பலர் விமர்சித்தனர்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வெங்கட்ரமணாவின் குடும்பத்தினர், அவரது மறைவுக்கு மத்தியில் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளனர். அவரது இரு கண்களை தானம் செய்துள்ளனர். இதன் மூலம் இரு பார்வையற்றோருக்கு பார்வை கிடைக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். ரூபா மற்றும் குடும்பத்தினர் தீவிர சோகத்தில் உள்ளனர். இந்தச் சம்பவம், நகரங்களில் அவசர காலங்களில் உதவி செய்யும் மனப்பான்மை குறித்து பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. “உயிரைக் காப்பாற்ற ஒரு சில நிமிடங்கள் போதும்” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!