Skip to content

என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

சென்னை : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பத்திரனாவை மீண்டும் வாங்க முயற்சி செய்தாலும், அதிக தொகை செலவழித்த கொல்கத்தா அணி அவரை கைப்பற்றியது. இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், KKR ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா, இப்போது பத்திரனாவையும் சேர்த்து அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பத்திரனா, சென்னை அணியில் 2022 முதல் விளையாடி, டெத் ஓவர்களில் யார்க்கர்கள் மற்றும் ஸ்லோ பவுன்சர்களால் அசத்தியவர். தோனியின் வழிகாட்டுதலில் வளர்ந்த அவர், சென்னை அணியின் முக்கிய ஆயுதமாக இருந்தார். ஆனால் இந்த ஏலத்தில் சென்னை அணி அவரைத் தக்க வைக்கவில்லை. கொல்கத்தா அணி அதிக தொகை செலவழித்து அவரை வாங்கியது, டெத் ஓவர்களில் அவரது திறமையைப் பயன்படுத்தும் திட்டமாகக் கருதப்படுகிறது. ரசிகர்கள் பலரும் “டெத் ஓவரில் தோனிக்கு எதிராக பத்திரனா பந்து வீசுவதைப் பார்க்க ஆவலாக உள்ளோம்” என்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

பத்திரனா தனது X பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்: “சென்னைக்கு எப்போதும் என் இதயத்தில் தனி இடம் உண்டு. கிரிக்கெட்டைத் தாண்டி நம்பிக்கை, தைரியம் மற்றும் எப்போதும் நினைவில் கொள்ளும் குடும்பத்தை CSK எனக்கு கொடுத்துள்ளது. தோனி பாயின் வழிகாட்டுதல்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.” இந்தப் பதிவு சென்னை ரசிகர்களிடம் பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரனா சென்னை அணியில் இருந்தபோது தோனியுடன் நெருக்கமாக இருந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கிறது.கொல்கத்தா அணி இந்த ஏலத்தில் அதிக தொகை செலவழித்து அணியை வலுப்படுத்தியுள்ளது.

கேமரூன் கிரீன் (ரூ.25.20 கோடி) மற்றும் பத்திரனா (ரூ.18 கோடி) ஆகியோரை வாங்கியது, அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சென்னை அணி ரசிகர்கள் “பத்திரனா சென்னையில்தான் இருக்க வேண்டும்” என்று வருத்தம் தெரிவித்தாலும், “தோனிக்கு எதிராக பந்து வீசுவது சுவாரஸ்யமாக இருக்கும்” என்று சிலர் நகைச்சுவையாகக் கூறி வருகின்றனர்.

error: Content is protected !!