அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு10 நாள் கெடு விதித்தார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிம அவரது கட்சி பதவியை பறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது ஆதரவாளர்களும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்கள். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி .தினகரன், சசிகலா உள்ளிட்வர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையனை சந்தித்து பேச உள்ளதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் டெல்லி செல்வதற்காக இன்று காலை கோவைக்கு வந்தார் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது :
அ.தி.மு.க வில் இருந்து என்னை நீக்கியது குறித்து காலம் தான் பதில் சொல்லும்.
நான் எனது மனது நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்.
ராமரை காண செல்கிறேன். மனது ரிலாக்ஸாக வேண்டும் என்பதால், செல்கிறேன் நான் டெல்லியில் யாரையும் சந்திக்க செல்லவில்லை.
கடந்த சில நாட்களாக என்னை பலர் சந்திக்கிறார்கள்.10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து உள்ளனர். அவர்கள் நான் கூறியது சரி என்று கூறுகிறார்கள். நான் கூறியது சரி என்பதால் தொண்டர்களும், இதுகுறித்து வேறுபட்ட கருத்து கூறவில்லை. எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் என்ன நிலை என்பதை பத்திரிகையாளர்கள் தான் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததா ? என்று கேட்கிறீர்கள்
அதற்கு நோ கமெண்ட்ஸ் . அதே போல் மூத்த தலைவர்கள் யாரும் என்னை சந்திக்கவில்லை. டெல்லியில் நான் யாரையும் சந்திக்கவில்லை. இங்கு இருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன. பிரதமர் மோடி , அமித்ஷாவை சந்திப்பீர்களா ? என்று கேட்கிறீர்கள். நான் காண செல்வது கடவுள் ராமரைத் தான். 9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக கூறவில்லை. கோவில் போய் அமைதியாக இருக்கலாம் செல்ல இருக்கிறேன். நான் சொன்னதுக்கு, மாறுபட்ட கருத்து யாரும் சொல்ல வில்லை.
இதனால் நான் கூறியது தன் அனைவரது மனதிலும் உள்ளது. இவ்வாறு அவர் கூறிவிட்டு சென்றார் …. மேலும் மூத்த தலைவர் யாரேனும் அழைத்தனர் என்ற கேள்விக்கும் அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார் . கடவுள் ராமரைக்கான மட்டுமே செல்வதாகவும் அவர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார். நான் ஒரு நல்லதுக்காக கருத்து தெரிவித்தேன் அதன் மீது பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார் அவரது நடவடிக்கை தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை காலம் தான் பதில் சொல்லும் என எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளர் குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் மூத்த தலைவர்கள் யாரேனும் உங்களிடம் பேசினார்களா ? என்ற கேள்விக்கு சஸ்பெண்ஸ் என்றார் …