Skip to content

நான் தனி ஆளில்லை…மாபெரும் மக்கள் சக்தியின் பிரிதிநிதி நான்… நாகையில் விஜய் பேச்சு..

  • by Authour

நாகையில் புத்தூர் அண்ணா சிலை அருகே தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில்  பேச்சு… அண்ணா, பெரியாருக்கு வணக்கம். அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு வந்துள்ளேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாகை மண்ணில் இருக்கி்றேன். நாகூரால் அன்போடு, அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு வந்துள்ளேன். என்றைக்கும்  மீனவ நண்பன் நான். மீன் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாகப்பட்டினத்தில் முன்னேற்றம் இல்லை. மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே பொதுக்கூட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தேன். ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பது நமது கடமை.  மீனவர்களுக்கு நான் குரல் கொடுப்பது புதிதல்ல. மீனவர்களை பாகுபடுத்திப் பார்க்கிறது  மத்திய பாஜக அரசு. திமுக அரசு கபட நாடகம் ஆடுகிறது. மண் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும்.  நாகையில் கடல்சார் கல்லூரியை கொண்டு வராதது ஏன்.?.  மீன் வளம் தொடர்பான எந்த தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. வௌிநாட்டு முதலீடா அல்லது வௌிநாட்டில் முதலீடா?. முதலமைச்சர் சார் அவர்களே?… தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் முடியவில்லை. இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். நெல் மூட்டைகளை பாதுகாக்க குடோன்கள் கூட கட்டித் தரப்படவில்லை. பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அரியலூர் பரப்புரைக்கு சென்ற உடனே மின்தடை. திருச்சியில் ஸ்பீக்கருக்கு போர ஒயர் கட்.. எனது பரப்புரைக்கு பல்வேறு வகையில் தடை போடுகின்றனர்.  நான் களத்துக்கு வருவது புதியது அல்ல. என்றைக்கோ வந்துவிட்டோம்.  உங்கள் மிரட்டலுக்கெல்லாம் இந்த விஜய் ஆளில்லை. 2026 ல் இரண்டு பேருக்கு நடுவிலே தான் போட்டி.  எங்களுக்கு மட்டும் தான் அதிக கட்டுப்பாடு. அடக்குமுறை அரசியல் வேண்டாம்.

இனி தடைகள் போட்டால் மக்களிடமே அனுமதி கேட்டுவிடுவேன். ஆர்எஸ்எஸ் தலைவரோ, பிரதமரோ வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்குமா?. உழைத்து சம்பாதித்தவன் நான்.  நான் தனி ஆளில்லை…மாபெரும் மக்கள் சக்தியின் பிரிதிநிதி நான்.  குடும்பத்தை வைத்து கொள்ளையடித்து சம்பாதித்தவர் முதலமைச்சர் உழைத்து சம்பாதித்தவன் நான். என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!