கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கரூர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் தங்கவேல் தமிழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்:
உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருந்து என்ன தேவைகளோ ஒரு அண்ணனாக என்னிடம் நீங்கள் எடுத்து சொல்லலாம் அதனை நிறைவேற்றியே வேண்டிய கடமை இருக்கிறது. நிச்சயமாக உங்கள் குடும்பத்தின் ஒருவனாக கடமைகளை உறுதியாக நிறைவேற்றுவோம் என்று சொல்லிக் கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்தார்.

