Skip to content

என் நண்பர்களால் தான் நான் நடிகனாக மாறினேன்… மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தான் நடிகனாக மாறியது எப்படி என்று ஒரு இன்டெர்வியுவில் கூறியுள்ளார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  ஒன்றிய அரசு வழங்கிய ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மனம் திறந்து பேசினார். ‘48 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவை பற்றி எதுவும் தெரியாத காலத்தில் நானும், நண்பர்கள் சிலரும் படம் தயாரிக்க கனவு கண்டோம். நான் தைரியமாக மெட்ராஸுக்கு சென்றேன். எனக்கே தெரியாமல் என் போட்டோவை இயக்குனர் பாசிலுக்கு அனுப்பிவிட்டார்கள். இப்படித்தான் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தில் அறிமுகமானேன்.

‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பில் கேமரா முன்னால் நிற்கும்போது, அந்த நினைவுகள் கண்முன் வந்து செல்கிறது. நான் மரத்தில் இருந்து விழுந்த சின்ன இலை. காற்றில் அங்கும், இங்கும் ஆடிக்கொண்டிருந்த என்னை திரையுலகினர் சரியான இடத்தை நோக்கி பயணப்பட வைத்தார்கள். எப்போது என்மீது எனக்கே சந்தேகம் வந்து தடுமாறுகிறேனோ, அப்போது ‘லாலேட்டா’ என்ற அன்பான குரல்கள் என்னை ஊக்கப்படுத்தி முன்னழைத்து செல்கின்றன.

error: Content is protected !!