Skip to content

மக்கள் பணி செய்வதற்காக தான் வந்திருக்கேன்… திவ்யா சத்யராஜ்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத சூழலிலும், எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணலும் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு விண்ணப்பம் நாளை (வெள்ளிக்கிழமை) துவங்குகிறது.
இந்நிலையில், நடிகர் சத்யராஜின் மகளும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இல்லை.. இல்லை.. நான் தேர்தலில் வெல்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணி செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன். அதேநேரம் தேர்தலில் எல்லோருடனும் சேர்ந்துகொண்டு மக்கள் பணி செய்வேன்; பிரசாரம் செய்வேன். மகளிர் உரிமைத் தொகை ரொம்ப நல்ல விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!