சென்னை , கொளத்தூரில் 15 ஜோடிகளுக்கான விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது..
ஒவ்வொரு தொகதிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் செல்வேன். கோளத்தூருக்கு வார வாரம் வருகிறேன். கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புத்துணர்ச்சியும், வந்துவிடுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி. எந்த தொகுதியில் கிடைக்கக்கூடிய வரவேற்பை விட கொளத்தூரில் கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கொளத்தூர் தொகுதியை பார்த்தாலே பெருமையாகவும், பொறாமையாகவும் இருப்பதாக கூறுகின்றனர். கொளத்தூர் என்றாலே சாதனையும், இந்த ஸ்டாலினும்தான் நினைவுக்கு வரும். எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக, செல்லப்பிள்ளையாக, நல்ல பிள்ளையாக இருப்பதே மகிழ்ச்சி. கொரோனாவிற்கு பின்னர் பணிச்சூழல் மாறியதால்தான் Office Space உருவாக்கப்பட்டது.
ராஜிவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனையை விட சிறப்பான பெரியார் நகர் மருத்துவமனை

சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் நம்ம தொகுதிகள் தான். அனைத்து தொகுதி மக்களுக்கும் எல்லாம் கிடைக்கவேண்டுமென பணியாற்றி வருகிறோம். பல்வேறு சட்ட சிக்கல்களை களைந்து வண்ண மீன்கள் விற்பனை நிலையம் திறக்கபட்டது. உங்க வீட்டு பிள்ளையாக இருப்பேன். முதல்வர் கல்விச் சோலை திட்டத்தால் மாணவர்கள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர். மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். எந்த அரசு திட்டங்களை எடுத்தாலும் அது கொளத்தூரில்தான் அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
என் வெற்றிக்குப் பின்னால் எனது மனைவிதான் இருக்கிறார். ஒவ்வொரு ஆணுடைய வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் தான் இருக்கிறார். மணமகன்களுக்கு ஒரு அறிவுரை, உங்கள் மனைவி சொன்னால் கேட்க வேண்டும். அளவுடன் பெற்று வளமுடன் வாழுங்கள் என்றுதான் இப்போது சொல்ல வேண்டும். என்று இவ்வாறு பேசினார்

